Monday, June 23, 2008

இன்னும் என்னை...

இடம்: ஆசியாவில் ஒரு மாநகரம்

நாள்: தை மாதத்தில் ஓர் நாள், 2014

தொலைக்காட்சியில் என்ன பார்ப்பது என்று ஒரு யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அவள் Sochi ஒலிம்பிக்ஸில் Ice Hockey என்று அடம் பிடிக்க, நானோ Sun டிவியில் எட்டாவது முறையாக prime time slot வாங்கியிருந்த ராதிகாவைத் தான் பார்க்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தேன். கடைசியில் வென்றது என்னவோ நான் கொடுத்திருந்த உறுதி மொழி தான். உன் விருப்பப்படி தான் எல்லாமே என்று பல வருடங்களுக்கு முன்பு கொடுத்த உறுதி மொழி.

ரஷ்ய வீரர்கள் பனியில் சறுக்கலானார்கள். விதியை நொந்த படியே ரசிக்க ஆரம்பித்தேன், அவளுடைய பெருமிதத்தை. நான் கோபப்பட நியாயமான காரணங்கள் இருந்தன. Sochiக்கு நேரில் சென்று பார்க்கலாம் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம். நாங்கள் என்றால் Arun, Karthi அப்புறம் நானும். இவள்தான் வர மறுத்து விட்டாள். சில சொல்ல (என்னிடம் சொல்ல) விரும்பாத காரணங்களால் அவர்களும் செல்லவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு London பிளானும் இப்படித்தான் drop ஆனது.

இன்றைக்கு திரும்பி வருவோம். நேரில் பார்க்காத Sochiயை TVயில் பார்த்து கழிவிரக்கம் கொள்ள என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம். என்னை இன்னும் எப்படி சீண்டலாம் என அவள் brain-storm கொண்டிருந்தாள். A friend in deed, indeed - யுவன் ஹை பிட்ச்சில் அலற, இதுல situation tone வேற என்று அவள் வாரியதை அலட்சியம் செய்வது போல் நடித்துக் கொண்டே என் அழை பேசியை எடுத்தேன். அப்பாடா...தமிழ் கெட்ட வார்த்தைகளை காதில் கேட்டு எத்தனை நாட்கள் ஆயிற்று? பூமியில தான் இருக்கியா என்றான். இன்னும்.. என்றேன் enthuவாக. Match பார்த்தியா? யார் ஜெயிச்சது? வினவினான். வழக்கம் போல் அவள்தான் என்றேன். உன்னோட வாழ்க்கைய நீ மட்டும் வாழு...Sochi ல யார் ஜெயிச்சாங்க? இன்னும் முடியல..இரு கேக்கிறேன்..யார் ஜெயிப்பாங்கன்னு கேக்கிறான் என்றேன் சலிப்புடன். நான் தான்னு சொல்ல வேண்டியது தானே. அவன் வாயில் வரக்கூடிய வார்த்தைகளை அவை நாகரிகம் கருதி வெளியிட முடியாததால், ஒரு valid விடைக்காக மறுபடியும் கேட்டேன், இம்முறை வேறொரு தொனியில். Russia தான் போல விடை அதே தொனியில் வந்தது. Convey செய்தேன். உனக்கு வெக்கமே இல்லியா? நாற்பத்தொரு லட்சத்து முன்னூறாவது முறையாக கேட்டான். சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தேன். Bye! better not see you again. இன்னும் சிரித்துக் கொண்டிருந்தேன்.

8 comments:

  1. whats this i cant understand anything on what topic is this இன்னும் என்னை..."

    ReplyDelete
  2. பின்னொரு நாளில் தமிழ் மறந்து விடுமோ என்ற பயத்தால் வந்த வினை இது.
    வாழ்த்துகளும் வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.

    ReplyDelete
  3. Kadha super but enaku onum puriyavae illa

    ReplyDelete
  4. சுந்தர ராமசாமியின் புத்தகம் ஏதாவது படித்ததின் விளைவா? அல்லது சாரு நிவேதிதா, எம்.ஜி.சுரேஷ்.. என்ன தமிழ் புத்தகம் கடைசியில் படித்தாய்?

    முதலில் படித்த போது குழப்பமடைந்ததை விட அதிகமாய் ஆச்சரியம் அடைந்தேன். நம்ம ஆனந்த் எழுதியதா!

    மூன்று முறை படித்து,நீ எப்படி கற்பனை செய்திருக்கலாம் என கற்பனை செய்ததில், இது உன் கனவாகவே புலப்படுகிறது.


    "யார் ஜெயிச்சது? வினவினான். வழக்கம் போல் அவள்தான் என்றேன்"


    இந்த வரிகள் சிரிப்பை மூட்டினாலும்
    கனவின் உச்சமாகத் தெரிகிறது.



    இன்னும் சிரித்துக் கொண்டிருந்தேன்


    இலக்கணப் பிழையா அல்லது புதிய இலக்கணமா?


    இந்த புதிய ஆளுமைக்கு "இன்னும் உன்னை" வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  5. kumudham book la one page stories irukkumey athai padikkara mathiriye irunthathu :-) good...thanks for giving me a feel of our home land :-)

    ReplyDelete
  6. எனக்கு சுஜாதா படித்தது போல் இருந்தது..எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை..உன்னிடம் இருந்து இப்படி ஒரு கதை வருவது...ஆச்சர்யம் என்னவென்றால் இத்தனை நாளாக வரவில்லை என்பது தான்...

    ReplyDelete
  7. மிகவும் அறுவையாக மன்னிக்கவும் அருமையாக இருக்கிறது. இதில் சிலவற்றை எண்ணிப்பார்க்கையில் சந்தோஷமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது.

    சந்தோஷம் தருவன:
    1. உன்னுடைய தமிழ்ப்பற்று
    2. என்றென்றும் ராதிகா
    3. எப்போதும் செருப்படி கொடுக்கும் நீ அவளிடம் (யார் அந்த அவள்?) செருப்படி வாங்குவது
    வருத்தம் தருவது: 2014 இல் கூட ஒலிம்பிக்ஸில் இந்தியா விளையாடாமல் இருப்பது
    கடைசியா... உங்க கிட்ட இன்னும் எதிர்பாக்குறேன்

    ReplyDelete
  8. It seems everyone had an impression that, I'm the storyteller here. Just think of this as a fictitious story told by a fictitious girl!!
    The storyteller is an adolescent girl and the other female is her mom.
    You may have to re-read the post now!

    ReplyDelete