இடம்: சென்னையில் ஏதோ ஒரு ...பாக்கம், ...தாங்கல் அல்லது நகர்
நாள்: வைகாசி 4, சர்வதாரி வருடம்
அறையில் ஒரு நாற்காலிக்கும் கட்டிலுக்கும் மாற்றி மாற்றி shuttle அடித்துக் கொண்டிருந்தேன். கையில் இன்னும் அழைபேசியை வைத்துக் கொண்டிருந்தேன். கடந்த இரண்டு மணி நேரங்களாக. அவ்வப்போது received calls historyயை புரட்டிக் கொண்டிருந்தேன். பத்து மணியளவில் நடந்த உரையாடலைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. யாரோ சொல்லியிருந்தார்கள். These things are bound to happen. You should learn to handle them. நடக்கிற வரைக்கும் எதுவுமே fantasy தான்.
ஆண்கள் அனைவரும் ஒரே ரகம். என்ன? இவன் சொல்லி விட்டான். மற்றவர்கள் சொல்லவில்லை. மற்றபடி அதிக வித்தியாசம் இல்லை. என்னுடைய முடிவை மதிக்கிறேன் என்கிறான். ஆனாலும் விட மாட்டானாம். முதலில், தெளிவாக குழப்புகிறான் என்றுதான் நினைத்தேன். பின்பு யோசித்துப் பார்க்கையில், இதில் ஒரு குழப்பமான தெளிவு இருப்பதாகவே உணர்ந்தேன்.
இதெல்லாம் எனக்கு தேவையில்லாத வேலை. கடைசியாக ஒரு விஷயத்தை மறக்க முயன்று வெற்றி அடைந்தது எப்பொழுது? அப்படி எதுவுமே நினைவில் இல்லை. யாரிடமும் துணிவாக பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷயமுமில்லை. இருந்தும் பகிர்ந்து கொள்ளத் துணிந்தேன். தண்ணீரில் அடித்துச் செல்லும் போது எதையாவது பிடித்துக் கொள்ளத் தானே கை துடிக்கிறது. பாம்பாக இருந்தாலென்ன, முதலையாக இருந்தாலென்ன. உங்களை பாம்பென்று கூறவில்லை. முதலையாகக் கூட இருக்கலாம். Just kidding.
நான்கை speed dial செய்தேன். எல்லாம் சொன்னேன். நிறைய பேசினோம். நிறைய கேட்டேன். திடீரென்று உரையாடல் துண்டித்தது. நாளை நாளை என்று தள்ளிப் போட்டிருந்த battery தீர்ந்தே விட்டிருந்தது. Charger உடன் இணைத்து விட்டு எழுந்தேன். அருகில் இருந்த நிலைக் கண்ணாடியில் முகத்தைப் பார்க்க நேர்ந்தது. நன்றாக தேடிப் பார்த்து விட்டேன். அந்த வெள்ளந்திக் கண்களை காணவில்லை. நல்லவேளை, அங்கே கள்ளத்தனம் குடியேறி இருக்கவில்லை.
Monday, February 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Enna solla vareenga - purindha mathiri irrukku -anaa- onnum puriyala. Solla thonratha naera sollunga.
ReplyDeleteஆனந்து ,
ReplyDeleteஉன்னுடைய மொபைலில் உள்ள speed dial # 4 யாருக்கு assign பண்ணிருக்கேனு தெரியனும். அதை பொறுத்து என்னுடைய review இருக்கணும் ல .Jokes apart, every time I read this article I get different meanings each time. Good post. I am trying to enjoy each moment of this life as you are.