மழை வருமென்று எதிர்பார்த்து மறந்து போகப்பட்ட நாட்களில் அதுவும் ஒன்று. ஆனால் அன்று நிகழ்ந்தவற்றுள் பல நினைவில் இருக்கின்றன.
அன்று காலை அலுவலகத்துக்கு வந்தவுடன், சில மாதங்களாக தூங்கிக் கொண்டிருந்த என் புலி பொம்மையை சுமதியின் மேஜையில் கொண்டு போய் வைத்தேன். சற்று நேரத்திற்கு பிறகு வந்தவர் பொம்மையை பார்த்து விட்டு பூரிப்பில் எனக்கு thanks சொல்லிவிட்டு போனார். சில நேரங்களில் அவர் வைத்திருக்கும் பொட்டு கண்ணுக்கு தென்படுவதே இல்லை. இன்னும் பளிச்சென்ற நிறங்களில் வைத்தால் நன்றாக இருக்கும். ஒரு நாள் யோசிக்காமல் சொல்லி விட வேண்டும்.
ஒரு மாதத்துக்கு முன், puncture ஆன சைக்கிளை KK நகரில் அண்ணன் வீட்டில் விட்டு வந்திருந்தோம். அதை எடுத்து வர சொல்லி நவீன் கேட்டுக் கொண்டிருந்தான். காலை ஏழரை மணிவாக்கில் பைக்கில் புறப்பட்டு சென்றோம். திரும்பி வரும் பொழுது நவீனை சைக்கிளில் வருமாறு சொல்லி விட்டு நான் முன் வந்தேன். அசோக் pillar சிக்னலை எப்படி கடக்க வேண்டும் என்று கூறி விட்டு சரவண பவன் வாசலில் வந்து நிற்கச் சொன்னேன். ஆளுக்கொரு மினி காபி குடித்து விட்டு வீடு வந்தோம்.
சிறிது படபடப்புடன் கண் விழித்தேன். என்ன சொல்ல வேண்டுமென்று முன்பே முனைந்திருந்ததுதான். சற்று நேரத்தில், புயல் வேகத்தில் புறப்பட்டு shoes அணிந்து வெளியே வந்து, மெதுவாக jog செய்யத்தொடங்கினேன். நேற்று நடந்த sms உரையாடல் நினைவுக்கு வந்தது. இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் 1:46 மணிக்கு ஒரு குறுந்தகவலை எழுதினேன்: "நிசப்தத்தை உடைப்போம். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். எந்த நாள் என்று நீ சொல். இடத்தையும் நேரத்தையும் நான் சொல்கிறேன்". இந்த நேரத்தில் அனுப்பினால் நன்றாக இருக்காது என்று அனுப்பாமல் save செய்தேன். காலை 5 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து தகவலை அனுப்பினேன். பின்பு தூங்கிப் போனேன்.
ஏழு மணியளவில் பதில் வந்தது: "எனக்கு காரணம் தெரிய வேண்டும்". கேள்விக்குறிகளும் ஆச்சர்யக் குறிகளும் நிறையவே இருந்தன. "To give a logical end to my proposal", என்று சொன்னேன். "Oh!", என்று பதில் வந்தது. "உன்னுடைய ஆச்சர்யம் எனக்கு தேவையில்லை. தேதியை சொல்.", என்று திமிர் குறையாமல் reply செய்தேன். "இன்று", என்றாள். "நேரம் கடந்து விட்டது. நாளை", என்றேன். சரி, நேரத்தை சொல் என்றாள். "காலை 6:30. கலைமகள் bus stop", என்றேன். "அவ்வளவு சீக்கிரம் முடியாது. make it in the evening", என்றாள். "6:45. இப்பொழுதெல்லாம் எனக்கு வேலை முடிய இரவு ஒன்பதாகி விடுகிறது. முடியாது என்றால் cancel it", என்று என்னவோ அவள்தான் receiving end இல் இருப்பது போல் பதில் உரைத்தேன். சற்று தாமதமாகவே பதில் வந்தது: "எனக்கு ok", என்று.
நினைவுகள் கலைந்துபோகையில் ஆரிய கௌடா சாலையின் முடிவிற்கு வந்து வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்தேன். பேப்பர் போட்டுக் கொண்டிருந்தவரிடம் மணி என்ன என்று கேட்டேன். 6:15 என்றார். இன்னும் அரைமணி நேரத்தில் போய் விட முடியுமா என்று ஐயப்பட்டுக் கொண்டே துரிதமாக ஓடலானேன். அசோக் நகரில் morning walkers அவரவர் வீடுகளுக்கு சென்றிருந்தார்கள். கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தன. காசி தியேட்டர் சிக்னலை கடந்து பாலத்தில் ஓடுகையில் சற்று அதிகமாகவே மூச்சிறைத்துக் கொண்டிருந்தேன். பாலத்தை தாண்டி முதல் U turn இல் சாலையை கடக்க வேண்டும். போக்குவரத்து குறைவதற்காக நின்று கொண்டிருக்கையில் கவனித்தேன். அவள் ஏற்கெனவே வந்திருந்தாள். அப்பொழுதுதான் வந்திருக்க வேண்டும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.
Listen. My respect for the human race has never stopped diminishing. That's probably because I spend most of my time reading books and less time with people. I never believed in Love either. That's because I'm never comfortable with girls. But I believe in my instincts. In the first few times I saw you, I was totally convinced that you are my soulmate. And I am still convinced. I do not know how to convince you. I had a few options before telling you. Doing something like faking a friendship does not enthuse me. It has to be spontaneous for you as well. What do your instincts say? This guy is to be avoided? Then tell me that now. I'm not going to try persuading you. If it says otherwise, tell me that too. I'm not going to laugh at you. You're worth waiting for. But I need to know if you really deserve being waited upon. I've learnt to accept people for what they are. Only that it will take time for me to sink it in. That's the reason, I walked with you over a god-forsaken drainage and that's the same reason, I'm having a bitter coffee with you in this hotel. Thanks for coming. அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை.
குறுந்தகவலில் ஆரம்பித்த நாள், குறுந்தகவலில் முடிந்தது. "Sorry Anand.. My parents said 'no' for meething". ஆச்சர்யக் குறியுடன் முடித்திருந்தாள். "Alright. Good night", என்று பதில் அனுப்பினேன். "Take care.. Good night!", மீண்டும் ஆச்சர்யம்.
"அவன் எங்க" என்று வெங்கடேஷ் கேட்டான். "வந்துக்கிட்டிருக்கான்", என்றேன். அவன் ஏதோ கேட்க எத்தனிக்கையில் இடைமறித்து சொன்னேன்: "பரவாயில்ல..சரவணபவன்ல காபி நல்லாத் தான் இருக்கு!".
I love blog, because any person can blog in their own feelings and to share things with. But i suppose the blog could only be improved if you posted more often.
ReplyDeleteI'd love to know who's commenting. Please mention your name.
ReplyDeletedei nice one da.. really njoyed reading it..ஆறு அது ஆழமில்ல அது சேரும் கடலும்.... இல்ல...
ReplyDelete