Saturday, February 12, 2011

திரைகடல் ஓடியும்

திரவியம் தேடவெல்லாம் இல்லை. நம் தமிழ்ப் படங்கள் பலவற்றில், முடிவில், முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் தனித்து விடப்படுவார். அவரை என்ன செய்வது, அவருக்கு எப்படி ஒரு logical end கொடுப்பது என்று நம் இயக்குனர்கள் திணறிப்போய் விடுவதை, பல படங்களில் கண்டு உச் கொட்டியிருப்பீர்கள். அப்படிப் பட்ட சமயங்களில் கடைப்பிடிப்பதற்கென்று எழுதப் படாத விதி ஒன்று நம் இயக்குனர்களிடையே உண்டு. அது தான், அந்த நபரைக் கொன்று விடுவது. இதன் மூலம் ஒரு directorial touch கொடுக்கலாம். கூடவே அந்த பாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கலாம்.

இன்னும் சில மென்மையான உள்ளம் படைத்த இயக்குனர்கள் உளர். இவர்கள் அந்த நபரை அமெரிக்காவுக்கு அனுப்பி விடுவார்கள். அது ஏன் அந்த நபர்கள் எல்லாம் அமெரிக்காவுக்கு தான் போக வேண்டுமா? இந்த சிங்கப்பூர், மலேசியா இங்கெல்லாம் அனுப்பக் கூடாதா?

இந்த மாதிரியாக, கதைக்குத் தேவைப்படாத, இருந்தால் மற்ற முக்கிய பாத்திரங்களுக்கு சங்கடம் தரக் கூடிய character ஆக நான் உருப்பெற்று விட்டதால், அமெரிக்கா போக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு, இப்போது புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

இருந்தாலும் that's not the end of the story. அங்கே போய் செய்வதென்று ஒரு பட்டியலை தயார் செய்து கொண்டு தான் புறப்படுகிறேன். அவை உங்கள் பார்வைக்கு:
  1. அங்கே நிறைவேற்ற ஒரு இலட்சியம் வேண்டாமா? Kristen Stewartடை கல்யாணம் செய்து கொண்டு தான் ஊர் திரும்ப வேண்டும். அதுவரை இந்த மண்ணை மிதிப்பதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன்.
  2. Chicago மற்றும் Boston மாரத்தான்களை ஓடி முடிக்கப் போகிறேன்.
  3. Charlie Munger க்கு appointment கொடுத்து அவர் புதிதாக என்னதான் சொல்கிறார் என்று செவிசாய்க்க வேண்டும்.
  4. Kick Boxing கற்றுக் கொள்ள வேண்டும். என்னை mug செய்ய முயலும் ஒரு அமெரிக்கனையாவது அந்தரத்தில் பறந்து உதைக்க வேண்டும்.
  5. ஆயிரக் கணக்கான டாலர்களை இந்திய ரூபாயில் மாற்றி ஹவாலா மோசடி செய்ய வேண்டும்.
  6. Garnet Lake போய் வர வேண்டும்.
  7. இதையெல்லாம் தாண்டி சில நாட்கள் வேலை செய்ய வேண்டும்.
இப்படியாக, எதற்கெடுத்தாலும் ஒரு list போடும் நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொண்டமைக்காக, ஒரு முறை தலையில் அடித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1 comment: