Tuesday, October 4, 2011

நியான் நகரம் - மதிப்புரை

ரணம் சுகம் மதிப்புரையைப் படித்து விட்டு நம்மை என்னவோ சுப்புடு என்று நினைத்து விட்டனர் போல, பாதை நண்பர்கள், நியான் நகரத்தை சும்மாவே அனுப்பி வைத்தார்கள். காசு கொடுக்காமல் வாங்கியதால் என்னவோ, கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. நம்மை மதித்து அனுப்பியவர்களுக்கு பணம் அனுப்பி அசிங்கப்படுத்தவும் மனம் ஒப்பவில்லை. கடைசியாக, "சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு", என்று சொல்லிக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த இடத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: கலைஞனின் உழைப்பை வாங்காமல் திருடும் யாரும் தன்னை ரசிகன் என்று கூறிக் கொள்ளத் தகுதி இல்லாதவர்களே.

நியான் நகரம் - பாதையின் இரண்டாம் படைப்பு. கொஞ்சம் நீளமான கதை. எண்ணிக்கையில் அதிகமான பாடல்கள். ரணம் சுகத்தில் establish ஆன பிறகு நியான் நகரம் ஒரு tight rope walk - நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

முதலில் கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் போகப் போக கதை சூடு பிடிக்கிறது. ஒரு நாளில் படித்து முடிக்கிற கதை இல்லை. எனக்கு நான்கு நாட்கள் ஆனது.

நல்ல விஷயங்கள் - பெண்ணைக் குற்றம் சொல்லும் chauvinistic approach இல்லை. Message சொல்கிறேன் பேர்வழி என்று நாட்டைத் திருத்தக் கிளம்பும் hero இல்லை. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் வரும் தடங்கல்களில் ஒன்றை எடுத்து அலசி இருக்கிறார்கள். சத்யன் போன்றவர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். சினிமா போன்ற powerful மீடியத்தில் இருப்பதால் அகப்பட்டுக் கொள்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஜெயிப்பது அவரவர் மன திடத்தைப் பொறுத்தது.

நிறைய பாடல்கள். மின்னல்கள் மௌனமா, நிரப்புகவே, தேனை மறந்துவிட்ட பூவும், நிலவுடன் நான் வரும் நகர்வலம் - மனதில் நிற்கின்றன.

ரணம் சுகத்தில் இழையோடிய நகைச்சுவை missing. எழுதியவன் நான் தான் என்று ஆங்காங்கே நினைவூட்டுகிறார் ஷம்மீர்.

ரணம் சுகத்தில் செய்த பல தவறுகளைத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள். நிறைகளை retain செய்திருக்க வேண்டாமா? நான் ரணம் சுகம் வாங்கியது a no-frills way. நியான் நகரத்தை இணையத்தில் வாங்க மிகவும் சிரமப்பட்டேன். பாடல்களை வாங்க amazon, கதையை வாங்க infibeam?

Anyway, நாங்கள் one-album-wonder இல்லை என்று நிரூபித்து விட்டீர்கள். தங்கள் கலைப்பணி தொடரட்டும்.

1 comment:

  1. My favorite song in Neon Nagaram is 'Karuppana salai'.

    //"சான்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு"
    I'm proud.. Ur writing is really good :)

    ReplyDelete