Sunday, September 18, 2011

ரணம் சுகம் - மதிப்புரை

ஒரு புத்தகம். நட்பு, காதல், இலட்சியம், வலி என்று எல்லாமே உண்டு. இணைப்பாக இசை. பாடல்கள் அத்தியாயங்களின் பொழிப்பாக. இந்த வடிவத்திற்கு புக்கிசை என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த facebook தலைமுறைக்கு பிடித்த மாதிரி படைத்திருக்கிறார்கள். வரவேற்க வேண்டிய முயற்சி.

கல்லூரி வாழ்க்கையின் சில பக்கங்களைப் புரட்டி இருக்கிறார்கள். சொல் வழக்கை எழுத்து நடையோடு கலந்து கட்டியிருக்கிறார் சமீர். இயல்பான நடை. நகைச்சுவை இழையோடும் வரிகள். இங்கு சொன்ன மாதிரி வெகு நாள் கழித்து வாய் விட்டு சிரித்தேன்.

எதை வேண்டுமானாலும் மன்னித்து விடுவேன். ஆனால் தமிழில் எழுத்துப் பிழைகளை மட்டும் மன்னிக்க மாட்டேன். சொல் வழக்கை உரைநடையோடு இணைக்கும் போது சில இடங்களில் இடறியிருக்கிறார். ஒரு நல்ல ஒப்பச்சரைக் (proof reader) கொண்டுப் பிழைகளைக் களைந்திருக்கலாம்.

படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் இசையைக் கேட்கும் பொழுது இனிமையாக இருக்கிறது. கதை, கவிதை, இசை எல்லாமே rawவாக இருக்கிறது. ஒரு வகையில் நன்றாக இருந்தாலும் இன்னும் செப்பனிட்டிருக்கலாம்.

"நாம் கேட்க நினைப்பதையே பிடித்தவர்களும் சொல்லுகையில் மனம் முழுமையாய் நிறைவடைகிறது" - ஆழம்.

"அவள் எண்களுக்கு அவள் பெயர் வைத்தேன்" - யதார்த்தம்.

"அவனுள் இல்லாத சமாதானத்தை உலகிடம் கேட்டுப் பார்க்க முயல்கிறான் போல" - நையாண்டி.

"வார்த்தையும் இசையும் மறைந்து வெறும் உணர்வாக மட்டும் மாறும் இந்த ஒரு பரவசத்திற்காக நூறு முறை மனிதனாக பிறந்து இறக்கலாம்" - கலைஞனுக்கே உரித்தான வார்த்தைகள்.

இளையராஜாவைப் பற்றி விமர்சிக்கும் போது, "அவர்கிட்ட ஒரு கிரியேட்டருக்கான திமிர் தெரியும்", என்று demo பக்கத்தில் போட்டு விட்டு, புத்தகத்தில் திமிரைப் பிடிவாதம் என்று மாற்றியிருக்கிறார். திமிர் என்பது ஒரு குணம். கெட்ட வார்த்தையல்ல. அப்படியே வைத்திருக்கலாம்.

சமீர், ராதா மோகனுக்கு வசனம் எழுதப் போய்விடாதீர்கள்.

இசைக்கு வருவோம். ஒவ்வொரு பாடலும் ஒரு அத்தியாயத்தின் முடிவில் ஏற்படும் உணர்வை இசையில் மென்மையாக சொல்லுகிறது. காதல் சொல்லு, வெயில் (வெய்யில் அல்ல) மழை பாடல்கள் இனிமை.

மைக்கேல் ஜாக்சன் மீது ஒரு விமர்சனம் உண்டு. இசையில் கவனம் செலுத்தாமல் ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்துவார் என்று. அது போலல்லாமல் கதை, இசை என்று இரண்டிலும் சீரான கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

ஒரே நாளில் படித்து/கேட்டு முடித்து விட்டேன் என்பதால் வெகு நாள் மனதில் நிற்காது. Contemporary யாக படைக்கிறேன் என்று இது போலவே தொடராதீர்கள். உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்.

http://www.ranamsugam.com/index.php

3 comments:

  1. Very good..
    Neon Nagaram is another musical novel by Padhaai.

    ReplyDelete
  2. ஒ, நான் தான் இன்னும் இந்திரா காந்தி செத்துட்டாங்களா காலத்துலயே இருக்கனா?

    ReplyDelete
  3. பாராட்டுக்களுக்கு நன்றிகள், விமர்சனங்களுக்கு நிரெம்ப நன்றிகள் ஆனந்த்! மிக எதார்த்தமான விமர்சனம்.
    ரணம் சுகம் பாதையின் முதல் musical novel முயற்சி.
    ஏராளமான "வேலைக்கு ஆகாது" மத்தியிலும், பலரின் "இதான் மொத தடவ மச்சான்" களினின் இடையேயும், தவறுகளிடையே கற்போம் என்ற எண்ணத்திலும் உருவானது.
    நிச்சயமாக பல தவறுகளை திருத்திக்கொண்டுவிட்டோம்.
    உங்கள் எதிபார்ப்பை புதிய படைப்பான நியான் நகரம் பூர்த்திசெய்யும் என நம்புகிறோம்.

    எங்கு தேடியும் உங்கள் மின் அஞ்சல் சிக்கவில்லை.

    kindly write to us at paadhaiband@gmail.com. we will arrange to send a copy of Neon Nagaram.

    ReplyDelete