Saturday, December 31, 2011

2011

இந்த ஆண்டு பெரிதாக எதையும் கிழிக்கவில்லை என்றாலும், எஞ்சிய 90 (அச்சுப்பிழை ஏதும் இல்லை) ஆண்டுகளில், என்னவெல்லாம் கிழிக்க வேண்டும், முக்கியமாக, எப்படியெல்லாம் கிழிக்க வேண்டும் என்று முடிவுகள் பல எடுத்திருக்கிறேன்.

"என்னவெல்லாம்" என்று மிகைப்படுத்தித்தான் கூறினேன். எல்லாவற்றையும் முடிவு செய்யவில்லை என்றாலும், ஒரு சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. தொடர்புடையவர்களைக் கலந்துரையாடாமல் எடுத்த முடிவுகளுக்காக வருந்துமாறு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாண்டின் கருப்பொருள்: செய்ய வேண்டியவைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான நெறிகளைக் கற்றுக் கொண்டேன். திருத்தமாகக் கூற வேண்டுமென்றால் கற்றுக் கொடுக்கப்பட்டேன்.

நண்பர்களை அடையாளம் கொள்ளுதல் எப்படி என்றறிந்து கொண்டேன். எவற்றை எப்பொழுது செய்ய வேண்டும் என்று கண்டு கொண்டேன். எதிர்பாராவிடங்களில் எதிர்பாரா நேரங்களில் நிகழும் நன்மைகளைக் கண்டுணரும் திறனை வளர்த்துக் கொண்டேன். எண்ணியாங்கெய்துதல் எப்படி என்றுணர்ந்தேன்.

வரும் ஆண்டுகளில் நிகழ்த்தப் போகும் பலவற்றிற்கு இவ்வாண்டின் பாடங்கள் இன்றியமையாத கூறுகளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment